Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

18th October 2024 21:54:59 Hours

56 வது காலாட் படைபிரிவினரால் தேவையுடைய குடும்பங்களுக்கு உணவுப் பொதிகள் விநியோகம்

56 வது காலாட் படைபிரிவின் 27வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 56 வது காலாட் படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இப் பகுதியில் வசிக்கும் அனைத்து சமூகத்தினரின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்ய மற்றொரு நலத்திட்டத்தை 12 செப்டெம்பர் 2024 அன்று ஆரம்பித்துள்ளது.

இதன்படி, கோகிலிய பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை படையினர் ஒருங்கிணைத்தனர்.

இத்திட்டத்தின் கீழ் 56 காலாட் படைப்பிரிவினரின் முன்முயற்சியால் இப்பகுதியில் உள்ள தகுதியான 20 குடும்பங்கள் பயனடைந்தன.

இந்த உலர் உணவு பொதிகளில் சம்பா அரிசி, வெங்காயம், பருப்பு, உப்பு, மசாலா, கோதுமைமா, சீனி, சோயா, பயறு, தேயிலை, சொக்கலேட் மற்றும் பப்படம் போன்றன உள்ளடக்கப்பட்டிருந்தன.