Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd August 2021 15:11:50 Hours

56 வது படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுபேற்பு

விஜயபாகு காலாட்படையணியின் (VIR) மேஜர் ஜெனரல் லக்சிரி பெரேரா வவுனியா 56 வது படைப்பிரிவின் 25 வது தளபதியாக வெள்ளிக்கிழமை (20) மத ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றார்.

56 வது படைப்பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் அணிவகுப்பு மரியாதையினால் கௌரவிக்கப்பட்டார். அதன்பிறகு, அவர் அலுவலக வளாகத்திற்குச் செல்வதற்கு முன்பு நிகழ்வின் நினைவாக ஒரு மரக்கன்று நடுவதற்கும் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு, மகா சங்க உறுப்பினர்கள் 'செத் பிரீத்' பாராயணம் செய்ய தனது பதவியேற்பிக்கான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். தொடர்ந்து அதிகாரிகளுக்கு உரையாற்றுவதற்கு முன்பு பௌத்த துறவிகளுக்கு 'பிரிகர' வழங்கினார்.

பிரிகேட் தளபதிகள், 56 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நிகழ்வின் போது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பங்குபற்றினர்.

மேஜர் ஜெனரல் நந்தனா துனுவில இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து குறித்த பதவிக்கு நியமனம் பெற்றதுடன் இப்புதிய பதவிக்கு முன்பதாக மேஜர் ஜெனரல் லக்சிரி பெரேரா பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் (DSCSC) பிரதி தளபதியாக கடமையாற்றினார்.

புதிய தளபதி மனிதாபிமான நடவடிக்கைகளின் உச்சத்தில் காலகட்டத்தில் 14 வது மற்றும் 18 வது விஜயபாகு காலாட் படையின் கட்டளைதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் கட்டளை அதிகாரி, 533 வது பிரிகேட் தளபதி , உதவி இராணுவ செயலாளர், பாதுகாப்பு சேவை கட்டளைகள் மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் முதன்மை பயிற்சி ஆலோசகர் போன்ற பல கட்டளை மற்றும் பணிநிலை நியமனஙளை வகித்துள்ளார்.