06th September 2024 18:49:45 Hours
இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 56 வது காலாட் படைப்பிரிவில் 3 செப்டம்பர் 2024 அன்று படைப்பிரிவு தலைமையகத்தில் இரத்த தான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் இருப்பை மீள் நிரப்பும் நோக்கில் இபபணி மேற்கொள்ளப்பட்டது. இந் நிகழ்வில் 07 அதிகாரிகள் மற்றும் 134 சிப்பாய்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.