01st January 2024 18:06:06 Hours
56 வது காலாட் படைப்பிரிவினரின் "வன்னி கிறிஸ்துமஸ் கரோல் - 2023" 2023 டிசம்பர் 28 அன்று வவுனியாவில் உள்ள கலாசார மண்டபத்தில் ஏற்பாடு செய்யபட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ பீ ஏ டிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்.
வவுனியா இரம்பைக்குள மடு மாதா தேவாலயம், வவுனியா மகாரம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயம், வவுனியா இரம்பைக்குளம் கிறிஸ்து தேவன் தேவாலயம், வவுனியா, கொமரசன்குளம் மாதா தேவாலயம் ஆகியவற்றின் பாடகர் குழுவினரால் இவ்விழாவில் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டன.
அருட்தந்தை. வண. அந்தோனிதாஸ் தலிமா அவர்களால் ஆரம்ப பிரார்தனை மேற்கொள்ளப்பட்டதுடன் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், சிப்பாய்கள், வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர், அரச அதிகாரிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோர் நத்தார் கரோல் இசை நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வருகை தந்திருந்தனர்.