Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd September 2023 21:17:19 Hours

553 வது காலாட் பிரிகேட் படையினரால் ராமநாதபுர பொதுமக்களின் மரம் நடும் பணிக்கு உதவி

யாழ்ப்பாணத்தில் உள்ள இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 31 ஓகஸ்ட் 2023 அன்று நடைபெற்ற விழாவின் போது, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது காலாட் பிரிகேடினர் பொருளாதார மரக்கன்றுகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கினர்.

அதன்படி, அப்பகுதியில் உள்ள 200 வறிய மாணவர்களுக்கு பாடசாலை பை, பாடசாலை உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய பாடப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நலன் விரும்பிகள் மற்றும் நன்கொடையாளர்கள் அந்த அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக நிதியுதவி வழங்கினர்.

இதேவேளை, இராணுவ ஒருங்கிணைப்பு மூலம் கண்டாவளை பிரதேச செயலகம் மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் அனுசரணையில் 200 குடும்பங்களுக்கு 200 தென்னை, மருதம், இலுப்பை, பனை, பலா, வேம்பு மரக்கன்றுகள் மற்றும் 5 கிலோகிராம் இயற்கை உரப் பைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

யாழ்.பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாரச்சி ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக இந் நிகழ்வில் கலந்துகொண்டார்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்தார். 553 வது காலாட் பிரிகேட் தளபதியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் பங்குபற்றுதலுடன் இது முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 553 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர்.