13th October 2024 19:06:36 Hours
இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 553 வது காலாட் பிரிகேட் படையினர் 2024 ஒக்டோபர் 10 ஆம் திகதி தர்மபுரம் வைத்தியசாலையில் சிரமதான பணியை மேற்கொண்டனர்.
இந்த திட்டம் 553 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ,ஏ.ஐ.எஸ் மென்டிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இராணுவத்திற்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் சமூகம் சார்ந்த திட்டங்களில் இராணுவத்தை ஈடுபடுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
இந்த திட்டம் 6 வது இலங்கை சிங்க படையணி மற்றும் 14 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினரின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
உள்ளூர் பிரதேசத்தின் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சேவை செய்யும் மருத்துவமனை வளாகத்தை புதுப்பிக்கவும், சுத்தம் செய்யவும் அவர்கள் தங்கள் நேரத்தையும் முயற்சியையும் வழங்கினர்.
இராணுவ வீரர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக மருத்துவமனை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.
சுகாதார வசதியினை மேம்படுத்துவதன் மூலம் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் இத்திட்டம் எவ்வாறு பயனளிக்கும் என்பதை அவர்கள் மேலும் எடுத்துரைத்தனர்.