Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 18:00:19 Hours

553 வது பிரிகேட் சிப்பாய்களால் இரு பெண் குழந்தைகளுடனான குடுபத்திற்கு புதிய வீடு வழங்கி வைப்பு

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் 552 மற்றும் 553 வது பிரிகேடினரால் மருதங்கேணி பகுதியில் இரு பெண்பிள்ளைகளுடன் வசிக்கும் குடும்பமொன்றுக்கு அவசியமான வீட்டை நிர்மாணித்துக் கொடுப்பதற்கான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய சமூர்த்தி வங்கியின் நிதி உதவியுடன் “ஹிசட செவன” நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்படி பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

சுகாதார ஒழுங்குவிதிகளை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த நிகழ்வில் 55 வது படைப்பிரிவு தளபதியின் அழைப்பின் பேரில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு வீட்டிற்கான கட்டுமான பணிகளை ஆரம்பித்து வைத்தார். இத்திட்டத்தின் பயனாளியான திருமதி துஷாந்தி ஜூடித் ரொபின் அரசாங்கத்தின் சமூர்த்தி நலத் திட்டத்தை மாத்திரமே நம்பி வாழ்ந்து வந்த அவல நிலைமையை கருத்திற் கொண்டு படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போது 553 பிரிகேடின் 10 வது விஜயபாகு காலாட் படைப்பிரிவினர் வீட்டின் நிர்மாண பணிகளுக்கு உதவியிருந்ததோடு, இவ்வீட்டை திறந்து வைக்கும் நிகழ்வு இந்து மத அனுட்டானங்களுக்குப் பின்னர் பிரதம விருந்தினரால் பயனாளி குடும்பத்திற்கு வீட்டின் சாவி கையளிக்கப்பட்டதுடன், சிறு பிள்ளைகள் இருவருடனும் இணைந்து ரிப்பன் வெட்டி வீடு திறந்து வைக்கப்பட்டது.

அத்தோடு பெருந் தொகையான உலர் உணவு பொருட்கள், வீட்டு உபகரணங்கள், எழுதுக்கருவிகள்,கற்றல் உபகரணங்கள் என்பன பரிசளிக்கப்பட்டன.