30th March 2023 19:20:20 Hours
அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட 'ஹெல்ப் அன்ட் ஹெல்பர் நிறுவனம்', யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் 553 வது காலாட் பிரிகேடின் 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையினரின் ஒருங்கிணைப்பின் மூலம் திங்கட்கிழமை (மார்ச் 27) யாழ் குடாநாட்டில் மருதங்கேணி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 38 வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரண பொதிகளை வழங்கியது.
ஒவ்வொரு பொதியிலும் 9000/= ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்களை 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையினர், மருதங்கேணி பிரதேச செயலகத்தில் உள்ள கலாசார நிலையத்திற்கு வரவழைத்த பின்னர் அந்த பொதிகளை வழங்கினர். இத்திட்டமானது பாதுகாப்பு படையினருக்கும் சிவில் சமூகத்தினருக்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் ஒரு திட்டமாக முன்னெடுக்கப்பட்டது.
55 வது படைப்பிரிவு தளபதியின் பணிப்புரையின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வழங்கல் நிகழ்வில் பிரதம அதிதியாக 553 வது காலாட் பிரிகேட் தளபதி, வடமராட்சி பிரதேச செயலாளர், 10 வது (தொ) விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, வலயக் கல்விப் பணிப்பாளர், மருதங்கேணி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, மருதங்கேணி கல்லூரி அதிபர், மருதங்கேணி கிராம சேவை அலுவலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.