04th October 2024 18:45:08 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் 552 வது காலாட் பிரிகேட் தளபதி சி.டி. வெலகெதர யூஎஸ்பீ ஐஜீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 552 வது காலாட் பிரிகேட் படையினர் 02 ஒக்டோபர் 2024 அன்று இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இத்திட்டம் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை இரத்த வங்கியின் அனுசரணையுடன் பூநகரி ஆதார வைத்தியசாலையில் நடாத்தப்பட்டது. 40 இராணுவத்தினருடன், 04 பொதுமக்கள் மற்றும் பிரதேசவாசிகள் முன்வந்து இரத்ததானம் செய்தனர்.