Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th November 2022 06:30:48 Hours

552 பிரிகேட்டினால் யாழ். மாணவர்களுக்கு ஆங்கில பாடநெறி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் தளபதி அவர்களின் வழிகாட்டலுக்கமைய 552 வது பிரிகேட்டினரால் யாழ்.குடாநாட்டில் குறைந்த வருமானத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் அறிவை மேம்படுத்தி கொள்ளும் நிமித்தம் கடைக்காடு, பளை, இயக்கச்சி ஆகிய பொதுப் பிரதேசங்களில் உள்ள 75 மாணவர்களை கொண்ட குழுவினர்களை யாழ். ஐயக்கச்சியில் உள்ள முதலாவது இயந்திர காலாட்படையணி முகாமிற்கு வரவழைத்துக் அண்மையில் இப் பாடநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத் திட்டமானது யாழ். பாதுகாப்பு தலைமையக தளபதி அவர்களால் வழங்கப்பட்ட கருத்தியல் வழிகாட்டலுக்கமைய 552 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜயநாத் ஜயவீர அவர்களின் ஒத்துழைப்புடன் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடநெறியானது வெவ்வேறு பிரிவுகளில் 75 மாணவர்களுக்கு அந்தந்த பாடசாலைகளில் அவர்களின் தரத்திற்கேற்றவாறு பொருத்துவதுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் மொழிப் பாடநெறியின் பொறுப்பாளராகவும் ஏனைய சிவில் - இராணுவத்தின் ஆங்கிலப் பயிற்றுவிப்பாளரான கெப்டன் ரொஷினி ரணசிங்க அவர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றது. இத் திட்டம் யாழ் குடாநாட்டில் இராணுவ ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்படுகின்றது.