20th May 2023 22:13:31 Hours
அவுஸ்திரேலியா 'ஸ்டெப்ஸ் அறக்கட்டளையின்' நிதியுதவவியில் கரவெட்டி பொன்னம்பலம் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறிய பிள்ளைகளுக்காக பாடசாலை உபகரணங்களை விநியோகிக்கும் திட்டத்தை 551 வது காலாட் பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (மே 19) முன்னெடுத்தனர்.
விசேட தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு பாடசாலைப் பொருட்களையும் மேலும் 55 மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் பெறுமதியான விளையாட்டுப் பொருட்களையும் இதே நிகழ்வில் வழங்கினர்.
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஜே காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் 4 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி இத்திட்டத்தை ஒருங்கிணைத்தார்.
ஸ்டெப்ஸ் அறக்கட்டளையின் தலைவர் திரு. அனுராத வாசல ஏக்கநாயக்க, ஸ்டெப்ஸ் அறக்கட்டளையின் செயலாளர் புத்திக்க கருணா நாயக்க மற்றும் அதன் உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு 120,000 ரூபா நிதியுதவி வழங்கினர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக 551 வது காலாட் பிரிகேட் தளபதியும், வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரும் கலந்து கொண்டனர். 4 வது இலங்கை சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், நெல்லியடி வர்தகசங்கத்தின் பொருளாளர், அரச அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.