11th October 2024 16:01:11 Hours
551 வது காலாட் பிரிகேடினால் 2024 ஒக்டோபர் 08 ஆம் திகதி கிளிநொச்சி நகரில் விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 551 வது காலாட் பிரிகேட் பதில் தளபதி கேணல் டி.பி.எம்.ஆர் கந்தகும்புர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலையிலிருந்து கரடிபோக்கு சந்தி வரையான ஏ9 வீதி மற்றும் கனகபுரம் வீதி சுத்தப்படுத்தப்பட்டது சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் மாஸ் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஊழியர்கள் இத்திட்டத்தில் பங்கேற்றனர்.