Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th July 2021 10:45:13 Hours

551 வது பிரிகேட் படையினர் கொவிட் 19 தொடர்பாக மக்களை தெளிவூட்டல்

யாழ்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட் படையினர் கொவிட் 19 தொடர்பாக விழிப்பூட்டும் திட்டத்தை வெள்ளிக்கிழமை (16) மக்கள் செரிவான நெல்லியடி நகரப் பகுதியில் முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேராவின் ஆலோசணையின் பேரில் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜெயவர்தன மற்றும் 551 வது பிரிகேட் தளபதி ஆகியோரின் வழிகாட்டுதலில் படையினரால் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நெல்லியடி நகரின் பஸ் தரிப்பிடங்கள், கடைத் தெருக்கள், வங்கி கிளைகள், கடைகள், முச்சக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் மக்கள் நடமாட்ட பிற பகுதிகளை 4 வது இலங்கை சிங்க படை மற்றும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்தனர். அத்துடன் மக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளின் பொது சுகாதார அலுவலகங்கள் மற்றும் நகர சபைகளுடன் ஒருங்கிணைந்து இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.