Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2021 14:00:16 Hours

551 வது பிரிகேட்டினால் பருத்தித்துறையில் தொற்றுநீக்கும் பணிகள் முன்னெடுப்பு

551 வது பிரிகேட் சிப்பாய்களால் அண்மையில் கொவிட் – 19 பரவல் காரணமாக 14 நாட்களாக முடக்கப்பட்டிருந்த பருத்தித்துறை நகரை பொது மக்கள் பாவனைக்கான மீண்டும் திறப்பதற்காக தொற்றுநீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேற்படி தொற்றுநீக்கும் செயற்றிட்டம் யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு மற்றும் 55 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆகியோரின் அறிவுரைக்கமைய 551 வது பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் நடைபெற்றது.

பருத்தித்துறையில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் ஒருங்கிணைப்பில் 16 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட்படை வீரர்களினால் பஸ் தரிப்பிடம், வியாபார நிலையங்கள், முச்சக்கர வண்டி தரிப்பிடம் மற்றும் மீன் சந்தை உள்ளிட்ட இடங்களை தூய்மையாக்கி தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.