19th July 2021 10:45:13 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் 551 வது பிரிகேட் படையினரால் வௌ்ளிக்கிழமை (16) நெல்லியடி நகரில் தொற்று நீக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் கொவிட் - 19 வைரஸ் பரவலிலிருந்து பாதுகாப்பு பெறும் விதம் தொடர்பாக பொதுமக்களை அறிவுறுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் பணிப்புரைக்கமைய முன்னெக்கப்பட்ட இத்திட்டம், 55 வது படைப்பிரிவு தளபதி எம்.கே.ஜயவர்தன மற்றும் 551 வது பிரிகேட் தளபதி ஆகியோருடைய வழிகாட்டலுக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
4 வது இலங்கை சிங்கப் படை மற்றும் 16 வது இலங்கை இலேசாயுத காலாட்படை சிப்பாய்களால் நெல்லியடி பஸ் தரிப்பிடம், வியாபார நிலையங்கள், வங்கிக் கிளைகள், கடைகள், முக்கசக்கர வண்டி தரிப்பிடங்கள் மற்றும் மேலும் பல மக்கள் கூடும் பகுதிகளில் தொற்று நீக்கம் செய்யப்பட்டதுடன் கொவிட் - 19 பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் தொடர்பிலும் அறிவுறுத்தப்பட்டது.
மேற்படி செயற்றிட்டம் நெல்லியடி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளின் ஒருங்கிணைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.