Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th March 2024 18:50:08 Hours

55 வது படைப்பிரிவில் சர்வதேச மகளிர் தினத்தில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

கிளிநொச்சி மாவட்ட சமூகத்தினரின் ஒத்துழைப்பை மென்மேலும் வழுபடுத்தும் நிமித்தம், கிளிநொச்சி 55 வது காலாட் படைப்பிரிவினரால் 2024 மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் 30 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குழந்தை உபகரணப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

மேலும், கிளிநொச்சி வைத்தியசாலை மட்டுமல்லாது அக்கராயன்குளம், பூநகரின், வேராவில், தர்மபுரம் உள்ளிட்ட பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் பெண்களுக்கு 551, 552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட்டினரால் விசேட மதிய உணவு வழங்கப்பட்டது. இச்செயல் மருத்துவமனைப் பராமரிப்பில் இருந்த பெண்களின் மனதை கவரும் வகையில் அமைந்தது.

யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துக்கொண்டனர்.