Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2023 21:35:25 Hours

55 வது படைப்பிரிவின் படையினருக்கு தொழின்முறை புகைப்படம் எடுக்கும் பயிற்சி

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவினர் பெப்ரவரி 09-10 திகதிகளில் புகைப்படம் எடுத்தல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி நெறியினை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51, 52, 55, வது காலாட் படைப்பிரிவுகள் மற்றும் அதன் பிரிகேட்கள், படையலகுகளின் 04 அதிகாரிகள் மற்றும் 31 சிப்பாய்களுக்கு தொழின் முறை புகைப்படம் எடுத்தல் தொடர்பான அறிவினை மேம்படுத்துவதற்கான நிகழ்வினை நடாத்தினர்.

55 வது காலாட் படைப்பிரிவின் வேண்டுகோளின் பேரில் பிரபல படக் கலைஞரான திரு. நித்ய சில்வா இந்த நிகழ்ச்சியை இரண்டு நாட்களிலும் நடத்தியதுடன் சிறந்த தரம் மற்றும் கவர்ச்சிகரமான இயற்கையின் படங்களை உருவாக்குவதற்காக இலக்கு, கட்டமைப்பு மற்றும் திறன்களில் கவனம் செலுத்துதல் குறித்து படையினருக்கு கற்பித்தார். ஒவ்வொரு பங்கேற்பாளரின் சோதனைப் படங்களும் பயிலமர்வின் முடிவில் வழங்கப்பட்டதுடன் இப் பாடநெறியின் பின் அவர்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காணக்கூடியதாக இருந்தது.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதியான மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் இந் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. லெப்டினன் எல் டி ஐ லியனாராச்சி அவர்கள் பயிற்றுவிப்பாளருடன் இணைந்து செயலமர்வை ஒருங்கிணைத்து படையினருக்கு கற்பிப்பதில் தாராளமாக நேரத்தை செலவிட்டார்.

வேலைத்திட்டத்தின் இறுதியில் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி,பயிற்றுவிற்பாளர் திரு நித்யா சில்வா அவர்களின் பயிற்சி பங்களிப்பைப் பாராட்டி சிறப்பு நினைவுச் சின்னம் வழங்கினார்.