Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th May 2023 21:25:28 Hours

55 வது படைபிரிவு தலைமையகத்தினரால் வடக்கில் வெசாக் பண்டிகை

வெசாக் தினத்தை முன்னிட்டு 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய 55 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தின் ஏற்பாட்டில் தொடர்ச்சியான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந் நிகழ்வுகள் 4 மே 2023 தர்ம சொற்பொழிவுடன் ஆரம்பமாகியது. அதனைத்தொடர்ந்து 2023 மே 5 ம் திகதி இயக்கச்சி ஆதக பாடசாலையின் 100 மாணவர்களுக்கு புத்தகப் பொதிகள் வழங்கப்பட்டன.

1500க் கும் மேற்பட்ட பிரதேச மக்களுக்கு உணவுப் பொதிகளும் அதே நாளில் வழங்கப்பட்டன. வெசாக் நிகழ்வின் ஒரு பகுதியாக 55 வது காலாட் படைபிரிவின் கீழ் சேவையாற்றும் படையினருக்கு ஆசீர்வாதம் வழங்கும் நிமித்தம் ‘தர்ம’ பிரசங்க நிகழ்வை நாவற்க்குழி விகாரையின் பிரதமகுரு வண. ஹங்வெல்ல ரத்னசிறி தேரர் அவர்கள் நடாத்தினார்.

552 காலாட் பிரிகேட்டின் ஏற்பாட்டில் இயக்கச்சி ஆதக பாடசாலையில் புத்தக பொதிகள் வழங்கும் நிகழ்வுடன் மாணவர்களுக்கு ஐஸ்கிரீமும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் 553வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் ஜிடிஜேசி பிரேமதிலக்க யூஎஸ்பீ பீஎஸ்சீ, கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு. எம்கேஆர்எ குணரத்ன, பலாலி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் திரு. ஜிசிஎஸ்கே குலரத்ன, பலாலி தமிழ் இந்து அமைப்பின் தலைவர் திரு.ஏபி.மதன், இயக்கச்சி ஆதக பாடசாலை அதிபர் திரு.எம்.கஜேந்திரன் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

திரு. பிரசாத் லொகுபாலசூரிய மற்றும் அவரது குழுவினர் அந்த நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கினர். உணவுப் பொதிகள் விநியோகம், படைப்பிரிவு மற்றும் அதன் அனைத்து பிரிகேடுகளின் கூட்டு முயற்சியில் முன்னெடுக்கப்பட்டது. வெற்றிலைகேணி, கடைக்காடு, மற்றும் கெவில் கிராம மக்கள் வெசாக் அன்னதானத்தை மகழ்ச்சியுடன் பெற்று கொண்டனர்.

கடைக்காடு 55 வது காலாட் படைபிரிவின் தலைமையகத்திற்கு முன்பாக வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டதை கடைக்காடு தேவாலயத்தின் அருட்தந்தை வண.அமல் ராஜ் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்கள் கண்டு களித்தனர்.