01st October 2023 18:48:38 Hours
யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவின் படையினருக்கு பயிற்சி நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக 55 வது காலாட் படைப்பிரிவு கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை (செப்டெம்பர் 26) ‘சுரங்க கனிமங்கள் சட்டம்’ என்ற தலைப்பில் செயலமர்வு நடைபெற்றது.
இச்செயளமர்வு சட்ட புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் உதவி பணிப்பாளர் திரு. ஈஎச் ரஞ்சித் பிரியந்த மற்றும் அமுலாக்க அதிகாரி திரு. கேஜிஆர்எஸ் கம்லத் ஆகியோரால் நடாத்தப்பட்டது. இச்செயலமர்வின் போது, 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சுரங்க கனிமங்கள் (திருத்தம்) சட்டம், சுரங்க கனிமங்களின் போக்குவரத்து மற்றும் அகழ்வாராய்ச்சி தொடர்பான உரிமங்களின் ஆய்வு மற்றும் அதன் சட்டப் பின்னணி போன்றவை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து படையினருக்குக் கற்பிக்கப்பட்டது.
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது இராணுவ புலனாய்வுப் படையணி நிகழ்வை ஏற்பாடு செய்ததுடன், இச்செயலமர்வில் 136 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.