Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th June 2023 22:43:44 Hours

55 வது காலாட் படைப்பிரிவு பகுதியின் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போதைப்பொருள் பற்றிய அறிவூட்டல்

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவுப் பகுதியில் வசிக்கும் இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு போதைப்பொருளின் தாக்கம் குறித்த அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (11) 55 வது காலாட் படைப்பிரிவுப் தலைமையகத்தில் 'போதைப்பொருள் தடுப்பு' பற்றிய செயலமர்வு நடைபெற்றது.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி ஐஜி அவர்களினால் ஒருங்கினைக்கப்பட்டு, 553 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் ஜிஎஸ்கே பெரேரா ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இச் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

கொழும்பில் உள்ள மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் சிரேஷ்ட திட்ட அலுவலராக கடமையாற்றும் புகழ்பெற்ற ஆலோசகர் திரு. அப்துல் ரஹீம் அவர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடாத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள 14 விளையாட்டுக் கழகங்களைச் சேர்ந்த 160 க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 553 வது காலாட் பிரிகேடின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.