15th July 2024 11:54:13 Hours
8 வயது மற்றும் 17 வயதுடைய இரண்டு பிள்ளைகளுடன் கிளிநொச்சி சோலைநகர் உமையலாபுரத்தில் ஒற்றைப் பெற்றோராக வாழ்ந்து வரும் திருமதி கே செல்வி ஜெனா குடும்பத்திற்கு 55 வது காலாட் படைப்பிரிவு படையினர் உலர் உணவு பொருட்களை வழங்கினர். அவரது கணவர் பிரிந்துவிட்டதுடன் மேலும் இரண்டு பிள்ளைகளில் விஷேட தேவையுடைய உடைய 8 வயது மகனுடன் அவர் வசித்துவருகிறார்.
கடுமையான வறுமையின் காரணமாக, அவர் உதவி பெற 55 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்திற்கு வருகை தந்ததுடன் மேலும் நிலைமை மற்றும் சிரமங்களை தெளிவுபடுத்திய பிறகு, 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்கள் தேவையான உதவிகளை வழங்க தனது படையினருக்கு வழிகாட்டினார்.
மேலும், பிள்ளைகளின் கல்விக்கு உதவும் வகையில் பாடசாலை பைகள் மற்றும் எழுதுபொருட்களையும் வழங்கினர்.