Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2024 21:45:07 Hours

55 வது காலாட் படைப்பிரிவினால் அழகுக்கலை பயிற்சி பட்டறை

55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் லிமிடெட்டின் ஒத்துழைப்புடன் 55 வது காலாட் படைப்பிரிவின் கேணல் நிர்வாகம் மற்றும் விடுதி கேணல் டிஎம்வீவீ திஸ்ஸநாயக்க ஏடீஓ அவர்களின் மேற்பார்வையுடன் கிளிநொச்சி ஆர்எஸ் கீரின் பாரதி ரிசார்டில் 2024 செப்டம்பர் 02 ஆம் திகதி அழகுக்கலை பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.

இந்த செயலமர்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திரு.எஸ்.முரளிதரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொழிற்பயிற்சி அதிகார சபையின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் திருமதி டினோஜினி அமர்வுகளுக்கு தலைமை தாங்கினார்.

நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் வழங்கும் சான்றிதழ்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்களை வழங்குவதற்கு முன் பங்கேற்பாளர்கள் சுவையான உணவை உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் நேச்சர்ஸ் பியூட்டி கிரியேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் திரு. நாலக்க குணவர்தன மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.