Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th July 2023 21:52:55 Hours

55 வது காலாட் படைப்பிரிவினரால் நெல்லியடியில் மற்றுமோர் குடும்பத்திற்கு வீடு

யாழ். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், குடாநாட்டு ஆதரவற்ற குடிமக்களுக்காக வீடுகளை நிர்மாணிக்கும் மேலும் ஒரு திட்டமாக வண.எம்எஸ் சின்னையா மற்றும் திருமதி தபிதா சின்னையா ஆகியோர் தமது தந்தை திரு. ஜோய் அருள்ராஜாவின் நினைவாக 'வன்னி எய்ட்ஸ்' அமைப்புடன், கனடாவில் வசிக்கும் மேஜர் ஜெனரல் ஆர் ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களுடன் இனைந்து வழங்கப்பட்ட அனுசரணையில் நெல்லியடியில் மேலும் ஒரு வீட்டை நிர்மானிக்கவுள்ளனர்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயூபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களினால் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது காலாட் படைப்பிரிவினர் நெல்லியடியில் வசிக்கும் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை புதன்கிழமை (ஜூலை 05) நாட்டினர்.

03 பிள்ளைகள் மற்றும் வயதான பாட்டியுடன் வீடின்றி வாழ்ந்து வரும் திருமதி நல்லையா சுதர்ஷனியின் அவலநிலையை அவதானித்த படையினர் அவர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவித்ததுடன் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதி கனடாவை வசிக்கும் மேஜர் ஜெனரல் ஆர். ரத்னசிங்கம் (ஓய்வு) ஊடாக 'வன்னி எய்ட்ஸ்' அமைப்புக்கு தேவை தொடர்பில் அறிவித்தார்.

வீட்டை நிர்மாணிப்பதற்குத் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கும் பொறுப்பை 4 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் ஏற்றுக்கொண்டுள்ளனர். 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு அல்வாய்ப்பிள்ளை சிறி, பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், 551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எஸ்ஜே காரியகரவன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, 'வன்னி எய்ட்ஸ்' (கனடா) அமைப்பின் பிரதிநிதி திரு.என் ஜெகநாதன், அரச அதிகாரிகள், ஏனைய அழைப்பாளர்கள், படையினர் மற்றும் பொதுமக்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.