29th August 2023 22:14:48 Hours
55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் பதவியேற்றதை தொடர்ந்து ஓகஸ்ட் 23 பூநகரி 552 வது காலாட் பிரிகேடுக்கும் அதன் கீழ் உள்ள படையலகுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.
அதன்படி, படைப் பிரிவின் தளபதி 552 வது காலாட் பிரிகேட் மற்றும் 22 வது விஜயபாகு காலாட் படையணி, 2 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி ஆகியவற்றை பார்வையிட்டதுடன் பிரிகேட் தலைமையக வளாகத்திலும், ஒவ்வொரு படையலகிலும், அவை தொடர்பான தகவல்களை பெற்றுகொண்டதுடன் மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சீ ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் படையினருக்கு உரையாற்றினார்.