Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th September 2024 20:39:25 Hours

543 வது காலாட் பிரிகேட் படையினரால் மன்னார் - பேசாலை கடற்கரை சுத்தம்

இலங்கை இராணுவத்தின் 75 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 543 வது காலாட் பிரிகேட் படையினர், அதன் துணைப் படையலகுகளுடன் இணைந்து மன்னார் பேசாலை கடற்கரையில் 2024 செப்டம்பர் 28 ஆம் திகதி சிரமதானப் பணியை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த முயற்சியானது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதில் கவனம் செலுத்தியதுடன், மன்னார் கடற்கரையின் இயற்கை அழகை பாதுகாக்கும் நோக்கில் 'பூஜ்ஜிய பிளாஸ்டிக்' சூழலை அடைவதற்கு பங்களிக்கிறது.