Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th August 2023 20:35:17 Hours

542 வது பிரிகேட் படையினரால் விகும்புர கிராம மக்கள் மற்றும் மாணவர்களுக்கு உதவி

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவின் 542 வது காலாட் பிரிகேட் படையினர் மன்னார், விக்கும்புர கிராமத்தில் வசிக்கும் 25 ஏழைக் குடும்பங்கள் மற்றும் 12 சிறார்களுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை ஞாயிற்றுக்கிழமை (6) விகும்புர கிராமசேவக பிரிவில் வைத்து வழங்கினர்.

542 வது பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்பில் நன்கொடையாளர்களான திருமதி சாகரிகா பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இணைந்து ஒவ்வொரு பயனாளிக்கும் 6000/= பெறுமதியான உலர் உணவுப் பொதியும், ஒவ்வொரு மாணவருக்கும் 2000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎல்எம் சந்திரசேகர மற்றும் நன்கொடையாளர் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வு 54 வது காலாட் படைப்பிரிவு தளபதியின் ஆசிர்வாதத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.