Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th January 2025 11:44:00 Hours

542 வது காலாட் பிரிகேட்டினரால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

பூமலாந்தன் ஆரம்ப பாடசாலையில் பூமலாந்தன் ஆரம்ப பாடசாலை மற்றும் மது சிங்கள மகா வித்யாலயத்தைச் சேர்ந்த 94 மாணவர்களுக்கு 542 வது காலாட் பிரிகேட்டினரால் 2025 ஜனவரி 7 அன்று அத்தியாவசிய கற்றல் உபகரணம் மற்றும் பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 542 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

மேஜர் பிஜி நிரஞ்சன் ஆர்எஸ்பீ அவர்களின் ஒருங்கிணைப்பில் 4 வது கஜபா படையணி படையினர், இந்த திட்டத்தின் வெற்றிக்கு ஒருங்கிணைப்பு வழங்கினர். ரூ. 8,000 பெறுமதியான பாடசாலை உபகரணங்களை, மாணவர்களின் கல்வி தேவை மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், டிஎஃபசீசீ வங்கியின் ஆதரவுடன், மிஸ் ரோஸி துரிங் இத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கினார்.