28th July 2023 18:51:30 Hours
போதைப்பொருளின் ஆபத்துக்களை அறியும் முயற்சியாக, 54 வது காலாட்படை பிரிவின் 542 வது காலாட் பிரிகேட் படையினர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் சிப்பாய்களுக்கான 'போதைக்கு அடிமையாதல் மற்றும் தடுப்பு' பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை 25 ஜூலை 2023 அன்று 10 வது கெமுனு ஹேவா படையணி முகாமில் நடாத்தியது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் 542வது காலாட் பிரிகேட் படையினர் மற்றும் மன்னார் மாவட்டத்தின் ஒவ்வொரு பாடசாலையை பிரதிநிதித்துவப்படுத்தி50 ஆசிரியர்கள் மற்றும் வலயக்கல்வி பிரதி பணிப்பாளர் அலுவலக ஊழியர்களும் கலந்துகொண்டனர். இந் நிகழ்ச்சி உளவியலாளரால் நடாத்தப்பட்டதுடன் அவர் 'போதைக்கு அடிமையாதல், போதைப்பொருளின் பக்க விளைவுகள் மற்றும் குடும்ப தகராறுகள்' ஆகியவை தொடர்பாக விரிவுரையை நடாத்தினார். இச் சமூக அச்சுறுத்தலில் பிள்ளைகள் விழுவதைத் தடுப்பதன் முக்கியத்துவத்தையும் இவ் விரிவுரை எடுத்துரைக்கப்பட்டது.
54 வது காலாட்படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜிடப்ளியு செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் 542 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் டிஎல்எம் சந்திரசேகர ஆர்டப்ளியுபீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
542 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மேஜர் எம்வி பெர்னாண்டோ இந் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.