Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 13:15:05 Hours

542 வது பிரிகேடினரால் குறைந்த வருமானம் பெருவோருக்கு முந்திரி கன்றுகள் வழங்கி வைப்பு

மன்னாரிலுள்ள 542 வது பிரிகேட் சிப்பாய்களால் அப்பகுதிகளில் வசிக்கும் அநாதாரவான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விளைச்சல் நிளங்களில் பயிரிடுவதற்காக 400 முந்திரி கன்றுகள் 26 குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை (7) பகிர்ந்தளிக்கப்பட்டது.

மன்னாரில் உள்ள ‘இசமலத்தல்தீவு சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 542 வது பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.எஸ்.வி பெர்னாண்டோ பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 8 வது விஜயபாகு காலாட்படையணியின் கட்டளை அதிகாரி, 15 (தொ) கெமுனு படையணியின் இரண்டாந் நிலை கட்டளை அதிகாரி மற்றும் 20 சிப்பாய்களின் பங்கேற்புடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.