16th December 2023 22:42:15 Hours
வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2023) மன்னார் 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணியில் நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேடின் மூன்று அதிகாரிகள் மற்றும் 120 சிப்பாய்கள் பாம்பு கையாளுதல் பயிற்சியில் இனைந்து கொண்டனர்.
541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பி.வை.சி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் அழைப்பின் பேரில் கொமாண்டோ படையணி விசேட போர் பயிற்சிப் பாடசாலையின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் 5 மணி நேர பயிற்சியை கோட்பாட்டு மற்றும் நடைமுறை விளக்கங்களுடன் வழங்கினர்.