01st January 2025 15:19:13 Hours
541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஐ.பீ. ஜயசிங்க ஆர்டபிள்யூபீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ். 541 வது காலாட் பிரிகேட் படையினர் 30 டிசம்பர் 2024 அன்று கள்ளியடி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொண்டனர்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் பங்கேற்றனர்.