Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

29th February 2024 12:48:48 Hours

541 வது காலாட் பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட மென் பந்து கிரிக்கெட் போட்டி

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 541 வது காலாட் பிரிகேட் இளைஞர் அபிவிருத்தி சங்கம் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட மென் பந்து கிரிக்கெட் போட்டி 2024 பெப்ரவரி 23, 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் பெரியமடு மேற்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இப் போட்டியில் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பகுதியிலுள்ள உள்ளூர் விளையாட்டுக் கழகங்களை உள்ளடக்கி பத்து கிரிக்கெட் அணிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த போட்டிக்கான நிதியுதவி இளைஞர் அபிவிருத்தி சங்க விளையாட்டுக் கழகம் மற்றும் பெரியமடு பகுதியில் வசிக்கும் வர்த்தகர்களின் பங்களிப்பில் வழங்கப்பட்டது. இந்த சமூக செயற்பாடு விளையாட்டு வளர்ச்சிக்கான ஆதரவை எடுத்துக்காட்டுகிறது.

541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பிவைசீ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 800க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.