Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th February 2023 20:07:38 Hours

54 வது படைப்பிரிவு கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் வெற்றி

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 25 வது ஆண்டு நிறைவை விழாவை முன்னிட்டு, 21, 54, 56 மற்றும் 65 வது படைப்பிரிவுகளின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் வன்னிப் படையினருக்கு இடையேயான கூடைப்பந்தாட்டப் போட்டியை 62 வது காலாட் படைப்பிரிவின் படையினர் ஏற்பாடு செய்தனர். இப் போட்டியானது பெப்ரவரி 24-25 வரை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்றது.

இப்போட்டிகளின் ஆரம்ப சுற்றுப் போட்டிகளில் வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேசம் மற்றும் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கூடைப்பந்தாட்ட வீரர்கள் உட்பட படைப்பிரிவுகளின் ஏழு அணிகள் போட்டியிட்டன. இறுதி போட்டியில், 54 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 65 வது காலாட் படைப்பிரிவுடன் போட்டியிட்டதுடன், 37க்கு 36, என்ற புள்ளிகளை பெற்று சாம்பியன்ஷிப்பை தன் வசமாக்கியது.

இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் பங்குபற்றியவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார். 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருந்திரளான பார்வையாளர்கள் போட்டிகளை கண்டுகளித்