05th February 2024 17:30:18 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 'சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பந்தய விண்ணப்பங்களின் தாக்கம்' என்ற தலைப்பில் தகவலறியும் விரிவுரையில் கலந்து கொண்டனர். 54 வது காலாட் படைப்பிரிவின் சமிக்ஞை பிரிவின் அதிகாரி கட்டளை கெப்டன் டி.ஜி.டி.ஏ.யு தம்பகொல்ல அவர்களினால் இச்செயலமர்வு நடாத்தப்பட்டதுடன், 150 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் செயலமர்வில் கலந்து கொண்டனர்.
இச்செயலமர்வில் கேள்வி பதில் மூலம் தங்களின் அனுபவங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர். இந்த செயலமர்வானது 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீபிஎஸ் குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.