21st October 2023 22:10:04 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 54 வது காலாட் படைப்பிரிவு அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் நலன்புரி வசதிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், புதுப்பிக்கப்பட்ட விடுமுறை விடுதியும், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்களுக்கான புதிய தங்கும் கட்டிடத்தையும் திங்கட்கிழமை (ஒக்டோபர் 16) திறந்து வைக்கப்பட்டது.
54 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜீடப்ளியுஏ செனவிரத்ன யுஎஸ்பீ பீஎஸ்சி, அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து பிரதம அதிதியாக விழாவில் கலந்து கொண்டார்.
இரண்டு கட்டிடங்களும் 54 வது காலாட் படைப்பிரிவின் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களால் புதுப்பிக்கப்பட்டன. இவ் விழாவில் 54 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.