08th May 2023 22:20:30 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் ஆலோசகர் மற்றும் மனநல மருத்துவர் பிரிகேடியர் ஆர்எம்எம் மொனராகல யூஎஸ்பீ அவர்களின் தலைமையில் கெப்டன் எஸ்எம்பிகே சமரகோன், கெப்டன் எச்ஜிஎன் தேசப்பிரிய மற்றும் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அதிகாரவாணையற்ற அதிகாரி I எகேடபிள்யூகே அபேவர்தன ஆகியோர் இணைந்து 54 வது காலாட் படைப்பிரிவில் சேவையாற்றும் அனைத்து படையினருக்கும் உளவியல் சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆலோசனையை 2023 ஏப்ரல் 25 - 27 வரையான திகதிகளில் 54 வது காலாட் படைபிரிவில் வழங்கினர்.
இதன்போது அவர்களின் பணியிடத்தின் மன அழுத்தம், மன நிலை, தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகள் மற்றும் அவர்களுக்கு கவலையளிக்கும் ஏனைய பொதுவான விடயங்களுக்கு சாத்தியமான தீர்வுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இந்த திட்டமானது 54 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களினால் பரிந்துரைக்கப்பட்டது. 17 அதிகாரிகள் மற்றும் 05 சிப்பாய்கள் வருகை தந்த குழுவுடன் இணைந்து செயல்பட்டனர். இந்த திட்டம் வெற்றியடைய, ஒவ்வொரு படையலகு, பிரிகேட்கள் மற்றும் 54 வது காலாட் படைபிரிவின் தலைமையகத்தின் பிரத்தியோக 'ஆலோசனை பிரிவு என்பன செயற்பட்டன.
இதன் போது படையினர் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்படுவதற்கு முன், ஆய்வுகள், மூளைக்கான அமர்வுகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் விவாதங்கள் போன்றவை இடம் பெற்றன.