02nd July 2024 18:41:43 Hours
54 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்டீஐ மகாலேகம் டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் வைத்தியர் சி. ஹமித் நாணயக்கர அவரது மருத்துவ குழுவினருடன் இணைந்து மன்னாரில் விசர்நாய் கடி நோயை ஒழிக்கும் பொருட்டு வெற்றிகரமான தடுப்பூசி போடும் நிகழ்ச்சியை முன்னெடுத்தனர்.
2024 ஜூன் 16 முதல் 19 ஆம் திகதி வரை இத்திட்டம் நடைபெற்றதுடன் இப்பகுதி மக்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு விசர்நாய்க்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் இராணுவத்தினர் மற்றும் மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம் தடுப்பூசிகள் போடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டன.