Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th May 2023 22:45:58 Hours

54 வது காலாட் படைபிரிவினரால் 'வெசாக்' நிகழ்வு

ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை மேம்படுத்தும் வகையில், மன்னார் மாவட்ட செயலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மன்னார் 54 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தினரால் 'வெசாக்' நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்போது மே 5-9 திகதிகளில் பார்வையாளர்களுக்கு வண்ணமயமான, அலங்கார மற்றும் ஆக்கப்பூர்வமான மின் வெசாக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அன்னதானமும் வழங்கப்பட்டது.

மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி. ஏ. ஸ்டான்லி த மெல் மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ மற்றும் 54 வது படைப் பிரிவின் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் வெசக் தின (மே 5) நிகழ்வில் இணைந்து கொண்டனர்.

அனைத்து அலங்காரங்களும் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளின் படையினரால் வடிவமைக்கப்பட்டன மற்றும் அவற்றில் சிறந்த கூடுகளுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆக்கப்பூர்வமான வெசாக் கூடுகள் மற்றும் அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட ஒரு சில கூடங்களுக்கு செல்வதற்கு முன், வெசாக் வலயத்தில் விளக்குகளை இயக்க படைப்பிரிவு தளபதியும் மன்னார் மாவட்டச் செயலாளரும் அழைக்கப்பட்டனர்.

வெசாக் வலயத்தின் பிரபல்யம், கண்காட்சியை செவ்வாய்கிழமை (மே 9) வரை நீடிக்குமாறு ஏற்பாட்டாளர்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதேவேளை, 54 ஆவது காலாட் படைபிரிவின் 541 ஆவது காலாட் பிரிகேட்டின் 4 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் (VIR) சுமார் 150 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மே 1 ஆம் திகதி மன்னார் வைத்தியசாலையில் இரத்த வங்கியின் நலனுக்காக இரத்த தானம் வழங்கும் நிகழ்வில் இணைந்து கொண்டனர்.