29th September 2021 18:47:17 Hours
கடந்த இரு வாரங்களில் புலனாய்வு படைகளின் உதவியுடன் பொலிஸார் மற்றும் படையினர் இணைந்து, 54 வது படைப்பிரிவு கட்டளைக்கு உட்பட்ட பகுதிகளுக்குள் 1522 கிலோ கடத்தல் மஞ்சள் 10 மில்லியன் ரூபாய்கள் மதிப்புள் 600 லீட்டர் சட்டவிரோத மதுபானங்கள் சட்டவிரோத மண் அகழ்வு என்பவை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளர்.
மேற்படி 548 கிலோ மஞ்சள் தொகை 07,15 மற்றும் 22 ஆம் திகதிகளில் 22 செப்டம்பர் 2021 அன்று மன்னார் - மதவச்சி பிரதான வீதியின் குஞ்சுகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடையில் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு கடற்கரை பகுதியை நெருங்கிய வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய 17 செப்டம்பர் 2021 முன்னெடுக்கப்பட்ட தேடுகல்களின் போது 974 கிலோ கடத்தல் மஞ்சள் தனியாக மீட்கப்பட்டுள்ளன.
மேலும், சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு டிராக்டர்கள் செப்டம்பர் 11 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வெவ்வேறு இடங்களில் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் செப்டம்பர் 22 மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபான வகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தியாவிலிருந்து தலைமன்னார் வழியாக மீனவர்களால் கடத்தி வரப்படுகின்ற மஞ்சள் தொகை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
54 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ் உள்ள துணிச்சல் மிக்க படையினரால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நடத்தி வரப்படும் கேரள கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை மீட்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.