Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 13:23:59 Hours

54 வது படைப்பிரிவில் இராணுவ, சிவில் பணியாளர்களுக்கு சேவை வனிதையரால் உலர் உணவு பொதிகள்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் 2024 மார்ச் 29 அன்று 54 வது காலாட் படைப்பிரிவுக்கு விஜயம் மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, 54 வது காலாட் படைப்பிரிவின் இராணுவ மற்றும் சிவில் பணியாளர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 100 உலர் உணவுப் பொதிகளை தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி ஆகியோர் வழங்கினர்.

நிகழ்வின் நிறைவில் இராணுவத் தளபதி 542 வது காலாட் பிரிகேட் தளபதியுடன் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டார். மேலும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் இலங்கை சிங்கப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நெலுகா நாணயக்கார ஆகியோர் இடையிலும் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. தளபதி புறப்படுவதற்கு முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் சில பாராட்டுக் குறிப்புகளை எழுதினார்.

வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, இராணுவச் செயலாளர், 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.