16th August 2021 21:30:03 Hours
54 வது படைப்பிரிவின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர சில நாட்களுக்கு முன்பு மன்னாரில் உள்ள 541, 542 மற்றும் 543 வது பிரிகேட்கள் மற்றும் அவற்றின் கட்டுப்பாட்டு அலகுகளுக்குமான விஜயங்களை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது படைப்பிரிவு தளபதியினால் வீதித் தடைகள் மற்றும் கரையோர பாதுகாப்பு கடமைகளில் நிலை நிறுத்தப்பட்டிருந்த படையினர் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
542 , 543 வது பிரிகேடுகளின் தளபதிகள், 54 வது படைப்பிரிவின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் ஆகியோரும் மேற்படி விஜயத்தின் போதான நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.