Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd January 2024 20:03:47 Hours

54 வது படைப்பிரிவின் படையினருக்கு உளவியல் தொடர்பான விரிவுரை

54 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 54 வது படைப்பிரிவு படையினருக்கு ‘சிப்பாய்களின் மனதை மேம்படுத்துதல்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியான விரிவுரைகள் இடம்பெற்றன.

2024 ஜனவரி 16, 17 மற்றும் 18 ம் திகதிகளில் நடைபெற்ற விரிவுரைகளில் 54 வது காலாட் படைப்பிரிவின் பிரிகேட்கள் மற்றும் அதன் படையலகுகளின் 35 அதிகாரிகள் மற்றும் 413 சிப்பாய்கள் பங்கேற்றனர்.

இந்த விரிவுரை கலாநிதி ஆர் சந்திரிகா ராஜபக்ஷவினால் நடாத்தப்பட்டதுடன் பணியின் அழுத்த முகாமைத்துவம், வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை சமநிலைப்படுத்துதல், நிதி நெருக்கடிகளை நிர்வகித்தல் மற்றும் எதிர்விளைவுகளில் ஈடுபடுவதனால் ஏற்படும் விளைவுகள் சமூக மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவு படுத்தப்பட்டன.