Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th March 2024 10:12:15 Hours

54 வது படைப்பிரிவினரால் வருடாந்த ‘பாதயாத்திரை’ பக்தர்களுக்கு குடிநீர் வசதி

542 வது காலாட் பிரிகேடின் 4 வது கஜபா படையணி மற்றும் 8 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் வருடாந்த புனித பாதயாத்திரை பக்தர்களுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 08) பயணத்தின் போது பல இடங்களில் குடிநீர் வழங்கினர்.

கிறிஸ்தவ பாரம்பரியத்தில் புனித வெள்ளியுடன் இணைந்த வருடாந்த பாத யாத்திரை, மன்னார் புனித செபஸ்தியார் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையைத் தொடர்ந்து, 06 மார்ச் 2024 அன்று ஆரம்பமானது. மன்னார் ஆயர் வண. லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தலைமையில் விசேட ஆராதனையைத் தொடர்ந்து ஆரம்பமாகி வவுனியா கோமராசகுளம் கத்தோலிக்க தேவாலயத்தில் 08 மார்ச் 2024 அன்று பயணம் முடிவடைந்தது.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.எம்.பீ.எஸ்.பி. குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 542 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

2024 மார்ச் 07 ஆம் திகதி மடு வீதியிலிருந்து வவுனியாவிற்கு பாதயாத்திரை மேற்கொண்ட கிறிஸ்தவ பக்தர்களுக்கு 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினர் உதவிகளை வழங்கினர். 56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் யாத்ரீகர்களுக்கு குடிநீர், மருத்துவ உதவி மற்றும் அத்தியாவசிய வசதிகளை வழங்கினர்.