Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2025 12:40:30 Hours

54 வது காலாட் படைப்பிரிவு படையினரால் நன்கொடை மற்றும் தான திட்டம்

54 வது காலாட் படைப்பிரிவின் படையினர் 2025 மார்ச் 30, அன்று மன்னார் மறைமாவட்ட மையத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மகப்பேறு உதவிகளையும் வழங்கும் நன்கொடைத் திட்டத்தை முன்னெடுத்தனர். இந்த முயற்சிக்கு சரண பௌத்த அறக்கட்டளையின் ஒருங்கிணைக்கப்பில் திரு. திருமதி. சியா வோங் சி மற்றும் வெளிநாட்டு நலம் விரும்பிகள் நிதியுதவி வழங்கினர்.

அதே நாளில், சரண பௌத்த அறக்கட்டளையின் ஏற்பாட்டில் மாந்தோட்ட ராஜமஹா விகாரையில் தான வழங்கப்பட்டது. 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினரின் உதவியுடன் இலங்கையின் ரஜரட்ட பௌத்த பிக்கு பல்கலைக்கழகத்தின் 60 பௌத்த தேரர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தேரர்களின் பட்ட படிப்புகளை ஆதரிப்பதற்காக அறக்கட்டளை தலா ரூ. 10,000.00 நன்கொடை வழங்கியது.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.