16th August 2021 21:00:29 Hours
மதவாச்சி – மன்னார் (ஏ - 14) பிரதன வீதியில் பொரோ வாகனம் ஊடாக 1000 கிலோ மஞ்சள் தொகையை கடத்திச் சென்ற இரு சந்தேக நபர்களை 15 (தொ) கெமுனு ஹேவா படையினரின் வீதிச் சாவடியில் 2021 ஆகஸ்ட் மாதம் 11 ம் திகதி 54 வது படைப்பிரிவின் பரடயினர் கைது செய்தனர்.
மேற்படி மஞ்சள் தொகை இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டவை என சந்தேகிக்கப்படும் நிலையில் சுமார் 6 மில்லியன் ரூபாய் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் , மீட்கப்பட்ட மஞ்சள் மற்றும் வாகனத்துடன் மேலதிக விசாரணைகளுக்காக மடு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
54 வது படைப்பிரிவின் கட்டளையின் கீழ் செயற்படும் படையினர், மன்னார் மாவட்டத்திற்குள் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மஞ்சள் கடத்தல் மற்றும் கேரள கஞ்சா கடத்தலை குறிப்பிடலாம்.