08th May 2023 22:30:30 Hours
53 வது காலாட் படைப்பிரிவின் இயந்திர காலாட் படையணியில் சேவையாற்றும் 167 படையினரால் கலேவெல பொதுமக்களுடன் இணைந்து மே 04 ம் திகதி பிரதேசத்திலுள்ள பிரதான வைத்தியசாலையின் நோயாளர்களின் நலனுக்காக இரத்த தானம் வழங்கினர். இத் திட்டம் கலேவெல கனதன தேவருக்காராம விகாரையில் இடம்பெற்றது.
1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி ஒலுமடு பிரதேசத்தில் கடமைகளில் ஈடுபட்டிருந்த போது உயிர் நீத்த கொமாண்டோ படையணியின் வீரமரணம் அடைந்த போர் வீரர் கெப்டன் எம்எஸ் ஜீவந்த ராஜபக்ஷவின் 25 ஆவது நினைவு தினத்துடன் இத் திட்டம் இணைந்திருந்தது.
குருநாகல் தேசிய இரத்த மாற்று நிலையத்தின் ஒருங்கிணைப்புடன் 53 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜிபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதல்களுக்கமைய இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன் போது, 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவ்விடத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளர்களுடன் உரையாடினார்.
இத் திட்டத்தி்ற்காக குருநாகல் தேசிய இரத்த மாற்று நிலையம் இராணுவத்தினருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது.