Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th July 2021 19:12:55 Hours

53 வது படைப்பிரிவு தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு தங்குமிட கட்டிடங்கள் திறந்துவைப்பு

53 வது படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்காக புதிதாக படைப்பிரிவு வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு தங்குமிட கட்டிடங்கள் சனிக்கிழமை (10) 53 வது படைப்பிரிவு தலைமையக தளபதி நிஷாந்த மானகே அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.

படைப்பிரிவு தளபதியால் கட்டிடத்தின் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டு பாரவையிடப்பட்டதோடு, குறித்த கட்டிடங்களானது அதிகாரிகளுக்கான 08 அறைகளையும் மற்றும் சிப்பாய்களுக்கான 18 அறைகளையும் கொண்டமைந்துள்ளன. திறப்பு விழா நிகழ்வில் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்துகொண்டனர்.