Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th December 2021 05:20:22 Hours

53 வது படைப்பிரிவினரால் நடப்பட்ட செஞ்சந்தன கன்றுகள் சிறந்த வளர்ச்சி

கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள முதலாம் படை தலைமையகத்தின் கீழ் அனர்த்த தவிர்ப்பு படையினராகவிருந்து முன்னோடியாகச் செயற்படும் 53 வது படைப்பிரிவு படையினரால் சுற்றுச்சூழல் மீதான அக்கறையில் ஹபரணை, இனாமலுவவில் உள்ள 53 வது படைப்பிரிவு தலைமையக வளாகத்தில் நாட்டப்பட்ட 402 செஞ்சந்தன கன்றுகள் நன்கு வளர்ச்சியடைந்துள்ளன.

உள்நாட்டு மருத்துவம் மற்றும் உலகளாவிய அழகுசாதனத் துறைக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, செஞ்சந்தன மரங்கள் சட்டவிரோத கடத்தல் செயற்பாடுகள் காரணமாக பெருமளவில் அழிவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தினால் மேற்படி மர வகைகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

53 வது படைப்பிரிவின் 21 வது தளபதியான (ஓய்வு) மேஜர் ஜெனரல் மைத்திரி டயஸ் அவர்களின் முயற்சியின் விளைவாக ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு இந்தியாவிலிருந்து 500 செஞ்சந்தன கன்றுகள் இறக்குதி செய்யப்பட்டு தலைமையக வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டன. இத்திட்டம் மேலதிக செயலாளர் திரு என்.கே.ஜி.கே.நம்மவத்த அவர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், 402 சிவப்பு சந்தன மரங்கள் 16 அடி உயரத்திற்கு வளர்ச்சியடைந்துள்ளன. மேற்படி மர வகைகளுக்கு காணப்படுகின்ற தேசிய அளவிளான மதிப்பை கருத்திற் கொண்டு 53 வது படைப்பிரிவு தலைமையக தளபதிகளாக நியமனம் பெற்ற சகலரும் அவற்கை பாதுகாப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்தமை சிறப்பம்சமாகும். அதேபோல் தலைமையகத்தின் அரப்பணிப்புமிக்க பணியாளர்களினாலும் மேற்படி மரங்கள் தினமும் கண்காணிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதோடு அவற்றை பாதுகாத்தும் வருகின்றனர்.

மேலும் இதுவே நாட்டில் காணப்படும் அதிக செஞ்சந்தன மரங்களை கொண்ட பகுதியாக விளங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.