31st August 2023 20:04:35 Hours
முதலாம் படைத் தலைமையகத்தின் 53 வது காலாட் படைப்பிரிவின் 27 வது ஆண்டு நிறைவு வியாழக்கிழமை (24) தம்புள்ளை, இனாமலுவவில் 53 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத அனுஸ்டானங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
அதன் பின்னர் 53 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதி பிரிகேடியர் ஆர்டபிள்யூகே ஹேவகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ அவர்களால் படைப்பிரிவின் தளபதிக்கு நுழைவாயிலில் இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். இந் நிகழ்வின் நினைவாக முகாம் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.
பின்னர், புதிதாக புதுப்பிக்கப்பட்ட ‘அரலிய ஸ்பீட் மார்ட்’ நலன்புரி கடை தொகுதி மற்றும் இராணுவ சேவைப் படையணியின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஆகியவற்றை அவர் திறந்து வைத்தார். அத்துடன் படையினருக்கு அவர் உரையாற்றியதுடன் அனைவரும் மாலை இசை நிகழ்வுடன் இணைந்து கொள்வதற்கு முன் அனைத்து நிலையினருடனும் மதிய உணவிருந்துபசாரத்தில் கலந்து கொண்டார்.
இதற்கிடையில், ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களுடன் இணைந்து படையினர்களால் செவ்வாய்க்கிழமை (ஒகஸ்ட் 22) ‘போதி பூஜை’யுடன் ஒரு ‘தர்ம சொற்பொழிவு’ மற்றும் புதன்கிழமை (ஓகஸ்ட் 24) பிரிகேட் கிரிக்கெட் போட்டியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில் 53 வது காலாட் படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.