Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th December 2019 09:30:52 Hours

53 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையக புதிய தளபதியின் பதவியேற்பு நிகழ்வு

53 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 26ஆவது புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் பிரியந்த சேனாரத்ன அவர்கள் ஞாயிற்றுக் கிழமை 29ஆம் திகதி தம்புல்லை இனாமலுவையில் அமைந்துள்ள படைத் தலைமையக்தில் வைத்து தனது கடமையினை இராணுவ சம்பிரதாய மற்றும் மத அனுஷ்டனங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதை மற்றும் இராணுவ அணிவகுப்பு மரியாதையானது படைத் தளபதியவர்களுக்கு வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து புதிய தளபதியவர்கள் மத அனுஷ்டனங்களுக்கு மத்தியில் தனது கையொப்பத்தினையிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

53 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் படையினருடன் குழு புகைப்படத்தில் கலந்துகொண்ட தளபதியவர்கள் படைத் தலைமையக வளாகத்திற்கு முன்பாக மரக்கன்று ஒன்றினையும் நட்டார். அதன் பின்னர் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் படைப் பிரிவின் கடப்பாடுகளை நிறைவேற்ற தான் வைத்துள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.மேலும் அனைத்து படையினரின் பங்குபற்றுதலுடன் அங்கு இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்திலும் அவர் கலந்து கொண்டார்.

படைத் தலைமையகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், அனைத்து படைத் தலைமையக கட்டளைத் தளபதிகள், மற்றும் தளபதிகள் , பட்டாலியன்களின் கீழ் உள்ள படையினர் உட்பட இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Asics footwear | GOLF NIKE SHOES